செவ்வாய், 5 ஜூன், 2012

அறிவியலில் 100 சதம்

அறிவியலில் 100 சதவீத தேர்ச்சி.செய்முறைத் தேர்வில் 25 மதிப்பெண்களும்,கருத்துத் தேர்வில் 75 மதிப்பெண்கள் என மொத்தம் 100 மதிப்பெண்கள்.169 தேர்வு எழுதினர்.அத்துணை மாணவியரும் அறிவியலில் தேறி 100 விழுக்காட்டினைப் பெற்றது,மேலும் மகிழ்ச்சி அளிக்கிறது.

திங்கள், 4 ஜூன், 2012

எம் பள்ளி தேர்ச்சி சதவீதம்

.
எம் பள்ளி மாணவியர் சிறப்பாகத் தேறியுள்ளனர்.தேர்ச்சி சதவீதம் 90.சென்ற ஆண்டை விட ஐந்து விழுக்காடு அதிகம்.,அதுவும் புதிய கல்வித் திட்ட முறையில் எடுத்துள்ளது குறித்து மட்டற்ற மகிழ்ச்சி.

எம் பள்ளி மாணவி க.சூர்யா 472 எடுத்து முதலிடத்தையும்,
ஆ.சங்கீதப்ரியா 466 எடுத்து இரண்டாம் இடத்தையும்,
ரிஸ்வானா 449 எடுத்து மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.சத்யா என்ற மாணவியும் 449 எடுத்து மூன்றாம் இடத்தைப் பிடித்தார்
400க்கு மேற்பட்ட மதிப்பெண்களை பலர் எடுத்திருந்தனர்.
வெற்றி பெற்ற எம் மாணவியர்க்கு வாழ்த்துக்களையும்,பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் தேர்ச்சி பெற்ற மாணவியர்க்கு அரசு வழங்கும் ஊக்கத்தொகை ரூ1500+வட்டியும் சேர்ந்து அவர்கள் இடைநில்லாமல் கற்க உதவுகிறது.அதற்கு அரசுக்கு எங்களின் நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறோம்.