திங்கள், 6 ஆகஸ்ட், 2012

பரிசு வழங்கும் விழா

                 ஜீலை 23ல்  பள்ளியில் விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.   அதில் அந்தத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவியருக்குப் பரிசுத் தொகை வழங்கியதோடு அவர்களுக்குக் கேடயம் அளித்து பொன்னாடை போர்த்தி பாராட்டு தெரிவித்தார்.

இந்த விழாவினை ஒன்றியப் பெருந்தலைவர் தலைமை ஏற்று நடத்தினார்.ஊர் முக்கியப் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவியர்- மூன்றாம் இடம் -2 பேர்
இது தவிர 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவியர் 18 பேருக்கு ரூ5000
கோவை அறக்கட்டளை வாயிலாகப் பெற்றுத் தந்தனர்.

திங்கள், 16 ஜூலை, 2012

எம் பள்ளியில் காமராசர் தினவிழா

காமராசர் தினவிழாவில் நடைபெற்ற போட்டிகளில் பரிசு பெற்ற மாணவியருக்கு பரிசு வழங்கப்படுகிறது.விழாவினைக் கண்டு களிக்கும் எம் பள்ளி மாணவியர்

வியாழன், 12 ஜூலை, 2012

RMSA  தொடர்ச்சி
                                 டிசம்பர் மாதம் ஒதுக்கிய இந்த நிதியைத் தொடர்ந்து  மீண்டும்  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.அதில் அறிவியல் உபகரணங்களும்,   நூலகத்திற்கான புத்தகங்களும் வாங்கப்பட்டன.ஓராண்டு இணையதளக்கட்டணம் கட்டப்பட்டது. தன்னார்வலர் ஒருவரை நியமித்து அவருக்கு மூன்று மாத சம்பளம் கொடுத்து 9ம் வகுப்பு மாணவியருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
                                    அறிவியல் உபகரணங்களை ஆய்வகத்தில் அடுக்கி வைத்தாயிற்று.10ம் வகுப்பு செய்முறைத் தேர்வு செய்வதற்கு நீர் வசதி வேண்டும்.அதற்கான ஏற்பாடுகளும் செய்து தரப்பட்டு சிறப்பாக செய்முறைத் தேர்வுகள் நடை பெற்று அறிவியலில் எம் மாணவியர் 100 சதவீதம் தேர்ச்சி காட்டினர்.
                             இது சென்ற கல்வியாண்டின் நிலை,ஆக்கப் பாதைக்கு அழைத்துச் செல்ல எவ்வளவு முயன்றாலும் ,ஜான் ஏறினால் முழம் சறுக்கும் நிலை தான்,மீண்டும் மோட்டார் பழுது! 
RMSA  திட்ட  செயல்பாடுகள்
                               RMSA (ராஷ்ட்ர மத்ய சிக்க்ஷா அபியான்) திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டு பள்ளிக்கு தேவையான அவசியத் தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்று  ஆணை வெளியிடப்பட்டது.
                                                  எங்கள் பள்ளியில் அதற்காக ஒதுக்கப்பட்ட தொகையில் ,குடிநீருக்கான மின் மோட்டார் பழுது நீக்கப்பட்டு மேல்நிலைத் தொட்டியில் ஏற்றி 6 குழாய்கள் பொருத்தப்பட்டு மாணவியருக்கு குடிநீர்  வசதி    செய்து தரப்பட்டது.


மேல்நிலைத் தொட்டிகள் அமைக்கப்பட்டு  கழிவறைகளில் நீருக்கான  ஏற்பாடு  செய்து  தரப்பட்டது.
மேலும் உடைந்த  ஜன்னல்கள்  ஒட்டவைக்கப்பட்டு  சரி செய்யப்பட்டது.(வெல்டிங்)
மேலும்  குண்டும்,குழியுமாக இருந்த தரைத்தளம் பழுது நீக்கப்பட்டு சரி செய்யப்பட்டது.
பழுதடைந்த கணினிகள் பழுது நீக்கம் செய்யப்பட்டதோடு,UPS ,Speaker வாங்கப்பட்டது.

செவ்வாய், 10 ஜூலை, 2012

பள்ளியில் கலைநிகழ்ச்சிகள்

 பாரம்பரிய கிராமியக் கலையான  கரகம் ஆடும் எம் பள்ளி மாணவியர்
சிறப்பாக நடனம் ஆடும் எம் பள்ளி ஆறாம் வகுப்பு மாணவியர்


 நாடகக் கலையின் வழி கல்வியின் அவசியத்தை வலியுறுத்தும் மாணவிகள்
பட்டி மண்டப நிகழ்வில்லாத விழாக்கள் உண்டா தொலைக் காட்சியில் ?எம் பள்ளியிலும் கல்வியா?செல்வமா? என பட்டிமண்டபம் நிகழ்த்திய எமதருமை மாணவிகள்.

பள்ளி மாணவியருக்குப் பரிசு


472 மதிப்பெண் எடுத்து  முதலிடத்தைப் பிடித்த  மாணவி  சூர்யாவுக்கு  ரூ5000 பரிசும் ,கேடயமும்  வழங்கப்படுகிறது.466  மதிப்பெண்  எடுத்த  சங்கீதப்ரியாவுக்கு இரண்டாம் பரிசும்,449 மதிப்பெண் எடுத்த இரு மாணவிகளுக்கு மூன்றாம் பரிசும் சட்ட மன்ற உறுப்பினர்  தொகுதி  மேம்பாட்டு நிதியிலிருந்து  வழங்கப்படுகிறது.


மேலும்  400 க்கு  மேல்  எடுத்த  18  மாணவியருக்கு  கோவையிலுள்ள  அறக்கட்டளை  வாயிலாக  ஒவ்வொரு மாணவிக்கும் தலா 5000 ரூபாய்
வீதம்  வழங்குவதற்கு  ஏற்பாடு  செய்து  கொடுத்துள்ளதோடு  அவர்கள் தம்
பெற்றோருடன் சென்று வருவதற்கான ஏற்பாடுகளையும் செய்து தருகின்றார்


                                   மாணவர் தம்  கல்வி மேம்பாட்டிற்காக உழைப்போரைப் போற்றுவோம்.

ஞாயிறு, 8 ஜூலை, 2012

மேல்நிலைப் பள்ளி


1989 ல்  ஆண்கள்  பள்ளியிலிருந்து  பிரிந்து  அரசு மகளிர்  உயர்நிலைப் பள்ளியாக
செயல்படத் தொடங்கியது.நல்ல தேர்ச்சி விழுக்காட்டுடன் மாணவியர் சிறப்பாகப் படித்துத் தேறினர்.
                                             மீண்டும் +1 ,+2  பயில்வதற்கு  அருகிலுள்ள ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்குச் செல்ல வேண்டியதாக இருந்தது.மாணவியரின் எண்ணிக்கையும் அதிகமாக இருந்த சூழ்நிலையில் மகளிர் உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தினால் நல்லது என்ற எண்ணம் எழுந்தது.22 ஆண்டுகளுக்குப் பின்னர் 2012ல் இந்தப் பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டிருக்கிறது.
   இடைநிற்றலைத் தவிர்ப்பதற்கான பத்திரங்களை வழங்குவதற்கு குடியரசு தினத்தன்று வருகை புரிந்த சட்டமன்ற உறுப்பினரிடமும், அரசுப் பொதுத் தேர்வு எழுதச் செல்லும் பத்தாம் வகுப்பு மாணவியரை வாழ்த்த வந்திருந்த ஒன்றியத் தலைவரிடமும் எங்கள் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தோம்.


                                   
2012 ல் தரம் உயர்த்தப்பட்ட  100  உயர்நிலைப் பள்ளிகளில்  எங்கள்  பள்ளியும் ஒன்று.திண்டுக்கல் கல்வி மாவட்டத்தில் தரம் உயர்த்தப்பட்ட 2 பள்ளிகளில் எங்கள் பள்ளியும் ஒன்று என்பதில் எங்களுக்குப் பெரு மகிழ்ச்சி.
                                                        சட்டமன்ற உறுப்பினர்  அவர்கள் வருகை  புரிந்து  மாணவியர் சேர்க்கையைத் தொடங்கி வைத்தார்.