ஞாயிறு, 8 ஜூலை, 2012

மேல்நிலைப் பள்ளி


1989 ல்  ஆண்கள்  பள்ளியிலிருந்து  பிரிந்து  அரசு மகளிர்  உயர்நிலைப் பள்ளியாக
செயல்படத் தொடங்கியது.நல்ல தேர்ச்சி விழுக்காட்டுடன் மாணவியர் சிறப்பாகப் படித்துத் தேறினர்.
                                             மீண்டும் +1 ,+2  பயில்வதற்கு  அருகிலுள்ள ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்குச் செல்ல வேண்டியதாக இருந்தது.மாணவியரின் எண்ணிக்கையும் அதிகமாக இருந்த சூழ்நிலையில் மகளிர் உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தினால் நல்லது என்ற எண்ணம் எழுந்தது.22 ஆண்டுகளுக்குப் பின்னர் 2012ல் இந்தப் பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டிருக்கிறது.
   இடைநிற்றலைத் தவிர்ப்பதற்கான பத்திரங்களை வழங்குவதற்கு குடியரசு தினத்தன்று வருகை புரிந்த சட்டமன்ற உறுப்பினரிடமும், அரசுப் பொதுத் தேர்வு எழுதச் செல்லும் பத்தாம் வகுப்பு மாணவியரை வாழ்த்த வந்திருந்த ஒன்றியத் தலைவரிடமும் எங்கள் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தோம்.


                                   
2012 ல் தரம் உயர்த்தப்பட்ட  100  உயர்நிலைப் பள்ளிகளில்  எங்கள்  பள்ளியும் ஒன்று.திண்டுக்கல் கல்வி மாவட்டத்தில் தரம் உயர்த்தப்பட்ட 2 பள்ளிகளில் எங்கள் பள்ளியும் ஒன்று என்பதில் எங்களுக்குப் பெரு மகிழ்ச்சி.
                                                        சட்டமன்ற உறுப்பினர்  அவர்கள் வருகை  புரிந்து  மாணவியர் சேர்க்கையைத் தொடங்கி வைத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக